Oyilattam

ஒயிலாட்டம்

ஒயில் என்ற சொல் அலங்காரம், ஒய்யாரம், அழகு, சாயல் எனப் பொருள் தருகிறது. எனவே ஒயிலாட்டம் என்பதன் பொருள் அழகுள்ள ஆட்டம் என்பதாகும். குழுவாக இணைந்து குழுவின் எல்லோரும் ஒரே நிறத்தில் தலைக்கட்டும், கைக்குட்டையும் கொண்டு ஆடுவர். இக்கலை கோவில் திருவிழாவின் போதும் பொது நிகழ்ச்சிகளிலும் நிகழ்த்தப்படுகிறது. முன்னோர்களையும் ஊர்த் தெய்வங்களையும் வழிபட கொண்டாடப்படும் மாசிக்களரி விழாவிலும் அம்மன் எடுப்பு விழாவிலும் விநாயகர் கோவில், கத்தோலிக்க கிறிஸ்தவ கோயில்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. இக்கலை தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உடையார்பட்டி, ஆலங்குளம் வட்டத்தில் இரதமுடையார் குளம், புளியம்பட்டி நெல்லை சந்திப்பு போன்ற பகுதிகளிலும் மதுரைக்கு வடகிழக்கு அழகர் கோவிலின் அருகே வலயப்பட்டி கிராமத்திலும் திருச்சி கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலும் நிகழ்த்தப்படுகிறது.

பயிற்சி விவரம் :

  • 15 ஒயிலாட்ட அடவுகள் கற்றுத்தரப்படும்.
  • ஒவ்வொரு அடவிற்கும் பெயர் உண்டு.
  • ஒவ்வொரு அடவின் கால் அசைக்கும் முறை விளக்கக் குறிப்பும் பயிற்றுவிக்கப்படும்
  • பயிற்சியின் இறுதியில் ஒயிலாட்டப் பாடலுக்கு அடவுகள் வடிவமைக்கப்பட்டு அரங்கேற்றம் செய்யப்படும். முடித்ததற்கான கலை ஆளுமைகள் கையெழுத்துடன் வலைத்தமிழ் சான்றிதழ் வழங்கப்படும்.
  • அரங்கேற்ற நிகழ்வு வாய்மொழி மற்றும் நிகழ்த்துதலுக்கான தேர்வாக அமையும்.
  • இந்நிகழ்வின்போது நாட்டுப்புறக் கலை ஆளுமைகள் பங்கேற்று தேர்வை நடத்துவர்.